பள்ளி வரலாறு
பெருமை மிக்க நமது தென்காசி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க அடையாளங்களில் ஒன்று நமது இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
1923 ம் ஆண்டு துவங்கப்பட்ட நம் பள்ளி காலத்தை உண்டு செரித்து பல தலைமுறைகளை கண்டு களித்து இன்று 100 வது ஆண்டை கம்பீரமாக எட்டியுள்ளது.
இ .சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி நூற்றாண்டு விழா (1923-2023) பள்ளியின் வரலாறு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
* 1923- ம் ஆண்டு ஜில்லா போர்டு நடுத்தரப் பள்ளி தொடங்கப்பட்டது.
* 1924 – 4 வது பாரம்.
* 1925 – 5 வது பாரம்.
* 1926 – 6 வது பாரம் ஆக உயர்ந்தது.
* 1953 – இல் போர்டு உயர்நிலைப் பள்ளி ஆக தரம் உயர்த்தப்பட்டது.
* 01.01.1953-ல இ.சி.ஈஸ்வரன் பிள்ளை பெயர் போர்டு பள்ளிக்கு சூட்டப்பட்டது.
* 15.06.1953-ல பள்ளிக்கு தேவையான கட்டிடம் கட்ட மாநில நிதி அமைச்சர் .
உயர்திரு கி.சுப்பிரமணியம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
* அக்கட்டிடம் கட்டப்பட்டு 03.02.56 ல் நெல்லை மாவட்டக் கழகத் தலைவர்
உயர்திரு உ ராம சுப்பு ரெட்டியார் அவர்களால் திறக்கப்பட்டது.
* 1970 -60 இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்தப்பட்டது.
* 1978 -ல் இ.சி௱ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்தப்பட்டது.
* 2023 -ல் நூற்றாண்டு விழா காணும் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலை
பள்ளியாக நிமிர்ந்து சிறப்புற செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள்:
1. இயற்பியல் ஆய்வகம்.
2. வேதியியல் ஆய்வகம்.
3. உயிரியல் ஆய்வகம்.
4. உயிர் தொழில் நுட்ப கணினி ஆய்வகம்.
5. பொறியியல் பயிற்சி கூடம்.
6. வேளாண்மை பயிற்சி கூடம்.
7. கணினி ஆய்வகம்.
போன்ற ஆய்வகங்கள் மாணவர்களின் கற்றலுக்கும் செய்முறை பயிற்சிக்கும் பயன்படுகிறது
கணினி வழி கற்றலுக்குத் தேவையான SMART BOARD மற்றும் SMART CLASS ஆகியவை பயன்பாட்டில் உள்ளது. சுமார் 4000 புத்தகங்களை கொண்ட நூலகம் மாணவர்களின் படிக்கும் வழக்கத்தையும் , வாசிப்புத் திறனையும் வளர்த்தெடுக்க உதவுகிறது.
உடற்கல்வி:
சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்த விளையாட்டு மைதானம் பள்ளிக்குப் பின்புறம் அமைந்துள்ளது.
மாணவர்களுக்கு உடற்கல்வியானது ஆசிரியர்களால் சிறப்பாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றியாளர்களை உருவாக்குவதில் இப்பள்ளி சிறந்த பள்ளியாக செயல்படுகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள்:
6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்பறைகள் பழமை மாறாத பழைய கட்டிடத்திலும் 1௦, 11, 12ம் வகுப்புகள் புதிதாக நபார்டு திட்டத்தால் கட்டப்பட்ட 3 தளங்களைக் கொண்ட இரு உயரமான கட்டிடத்தில், 25 வகுப்பறையில் கற்றல் பணியும் அலுவலகப் பணியும் மற்றும் தலைமையாசிரியர் அறையும் செயல்படுகிறது.
இவ்வாறாக தரம் மற்றும் கட்டமைப்பில் வளர்ந்து பள்ளியானது மாணவர்களின் ஒழுக்கத்திலும், கல்வியிலும் அதிகக்கவனம் செலுத்துவதுடன் 90% மேல் தொடர்ந்து தேர்ச்சி பெற்றுவருகிறது.
மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் 12AT பிரிவு மாணவன் M.சைலஸ் மாநில அளவில் கீ போர்டு பிரிவில் முதல் மாணவனாக வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவ்விதம் சிறப்பு மிகுந்த வெற்றியாளர்களை உருவாக்குவதே எம்பள்ளியின் நோக்கமாக அமைந்துள்ளது.
அரசு உயர் நிலைபப்பள்ளியாக செயல்பட்ட காலத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை நடைபெற்ற வகுப்பறைகள் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் ,
பள்ளியாக தரம் உயர்ந்த சிறிது காலத்திற்கு பின்பு உருமாற்றம் அடைந்து கூட்ட அரங்கமாக மாற்றப்பட்டது. அக்கூட்ட அரங்கம் தனது பழைய நிலையினை 2019-
2020-ம் கல்வியாண்டில் கொடையாளர்கள் திரு.கா.இராஜகோபால் மற்றும்
DR.லலிதா முருகன் அவர்களின் கொடையால் சிறப்பு மிக்க புதிய ,
கலையரங்கமாக மாற்றமடைந்து அதற்கு DR. முருகன் நினைவு அரங்கம் எனப் பெயரிடப்பட்டது.
இக் கலையரங்கம் சுமார் 1000 மாணவர்கள் பயனடையும் வகையில் புதுப்பொலிவுடன் பயணிக்கிறது. கலையரங்கத்தின் மேடை இப்பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியர் திரு.காளிதாசன் அவர்களின் பெயரால் பொலிவுடன் அமையப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து 100 மாணவர்கள் ஒரே சமயத்தில் பயன்படுத்தும் விதத்தில் மாணவர்களுக்கான கழிப்பிட வசதியும், இரு சக்கரவாகனங்களை நிறுத்தப் பயன்படும் வகையில் வாகன நிறுத்தும் இடமும் மாணவர்களின் குடிநீர் வசதியை அதிகரிக்க சுமார் 15,000 லிட்டர் கொள்ளவு கொண்ட தரைகீழ் தொட்டியும், மாணவர்களை தொடர்ந்து கண் காணிப்பதற்கான சி.சி.டிவி யும், மாணவர்களின் கணினி பயிற்சிக்கென 4 கணினிகளும் கொடையாளர் Rtn. திரு K.இராஜ கோபால் அவர்களால் பள்ளிக்கு அளிக்கப்பட்டு தென்காசி மாவட்டத்தில் சிறந்த உட்கட்டமைப்பு
கொண்ட பாரம்பரிய மிக்க பள்ளியாக மேலோங்கி சிறப்பு பெறுகிறது.
இப்பள்ளி வளாகத்தில் செயல்படும் துறைகள்:
1. மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு.
2. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்.
3.மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி)
4 மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி)
5. மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்)
6. தென்காசி கல்வி மாவட்டத்திற்கு தமிழக அரசின் விலையில்லா புத்தகம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் மையம்.
மேற்காணும் அலுவலகங்களும் நலத்திட்டங்கள் வழங்கும் மையங்களுமாக செயல்படும் சிறப்பும், அதிக பரப்பும் பெற்ற இப்பள்ளி உருவாகக் காரணமாக அமைந்த கொடை வள்ளல் இலஞ்சி. சி.ஈஸ்வரன்பிள்ளை அவர்கள் ஆவார். அன்னார் கொடையாக அளித்த இடம் 20.59 ஏக்கர் பரப்பு கொண்டது.
தலைமையாசிரியர்,
இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்காசி.